
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளதாகவும், அதன் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சங்கரய்யாவை, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்ததுடன், மருத்துவர்களிடம் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக பேசினர்.
இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் சங்கரய்யாவை நேரில் சென்று யாரும் சந்திக்க வேண்டாம் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுகொண்டுள்ளது.
சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் அவருடன் இருந்து சிகிச்சைகளை கவனித்து வருகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா 1967, 1977, 1980 ஆண்டுகளில், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் பதவி வகித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி
சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி !#sankaraiya #Marxist #communistleader #malaimurasu pic.twitter.com/94siohAxIq
— Malaimurasu TV (@MalaimurasuTv) November 13, 2023