Page Loader
சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தகவல்
சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தகவல்

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தகவல்

எழுதியவர் Nivetha P
Nov 08, 2023
06:44 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகை வரும் 12ம்.,தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணம் மேற்கொள்வார்கள். அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. மக்கள் கூட்டநெரிசல் இல்லாமல் பயணிக்க சிறப்பு பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்டவைகள் இயக்கப்படவுள்ளது. சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணம் மேற்கொள்ள தமிழக காவல்துறையும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக நவம்பர் 9,10 மற்றும் 11 தேதிகளில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கமாக இரவு 8-10 மணி வரை கூட்டநெரிசல் அதிகமுள்ள நேரங்களில் 9 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்பதற்கு பதிலாக இருவழித்தடங்களிலும் 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மெட்ரோ அறிவிப்பு