2ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்
தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 15ம்.,தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட 1.70 வரையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று தேர்வு செய்யப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இத்திட்டம் மூலம் மாதந்தோறும் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.1,000 தமிழக அரசால் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையத்திற்கு சென்று மேல்முறையீடு செய்யலாம் என்று மாநில அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. இதனையடுத்து 11 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்திற்காக மேல்முறையீடு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.
விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார் முதல்வர்
அதனுள் 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 விண்ணப்பங்கள் தகுதியுடையதாக தேர்வுச்செய்யப்பட்டது. அதன்படி ஏற்கனவே ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் ஒரு கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் மகளிர்களோடு சேர்த்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 மகளிருக்கும் இம்மாத தொகை ரூ.1,000'ஐ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு முன்னதாக இத்தொகையினை வழங்க முதல்வர் கூறியதன்பேரில், மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்தி 300 பேருக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 நேற்று(நவ.,9)வரவு வைக்கப்பட்டது. இதனிடையே இத்திட்டத்தின் 2ம்-கட்ட ஆரம்பவிழா இன்று(நவ.,10)சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு 2ம்-கட்ட ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து உரையாற்றியுள்ளார்.