
"மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்றலாம்": 500 பக்க அறிக்கையில் நெறிமுறைகள் குழு
செய்தி முன்னோட்டம்
திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவை எம்.பி.யாக நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கைகள் "மிகவும் ஆட்சேபனைக்குரியது, நெறிமுறையற்றது, கொடூரமானது மற்றும் குற்றவியல்" என்று கூறிய குழு, கடுமையான தண்டனைக்கு பரிந்துரைத்துள்ளது.
NDTV-யில் குறிப்பிட்டுள்ள செய்திபடி, 500 பக்க அறிக்கையின் செயல்பாட்டுப் பகுதியில், மஹுவா மொய்த்ரா, "வெளிநபர்களுடன்" தன்னுடைய பயனர் ஐடியைப் பகிர்ந்து கொண்டதாகவும், தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் இருந்து பணம் மற்றும் பரிசுகளைப் பெற்றதாகவும், அது "கடுமையான தண்டனைக்கு" உரியது என்றும், அவரது தரப்பில் அது "கடுமையான தவறான செயல்" என்றும் குழு முடிவு செய்துள்ளது.
card 2
அறிக்கை என்ன சொல்கிறது?
மஹுவா மொய்த்ரா மற்றும் தர்ஷன் ஹிராநந்தனி ஆகியோருக்கு இடையேயான பணப் பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக, 'க்விட் ப்ரோ க்வோ'வின் ஒரு பகுதியாக, சட்ட ரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மக்களவை சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மஹுவா மொய்த்ரா நாளை மாலை 4 மணிக்கு குழு முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இருந்து மொய்த்ரா பணம் பெற்றதாகவும், இதற்காக தனது பாராளுமன்ற உள்நுழைவை தொழிலதிபருடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதாகவும் புகாரளிக்கப்பட்டது