
நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக காற்றின் தரம் கடுமையாக சரிந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை பெய்யத் திட்டமிட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் எரியும் பயிர் எச்சங்கள் மற்றும் வாகன புகை போன்ற உள்ளூர் காரணிகளின் கலவையால் தேசிய தலைநகரில் காற்றின் தரக் குறியீடு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் 'கடுமையான' பிரிவில் உள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் மற்றும் நிதி அமைச்சர் அதிஷி ஆகியோர் ஐஐடி கான்பூரின் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, ஐஐடி குழுவினர் தேசிய தலைநகரில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
card 2
உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததும் செயல்படுத்த திட்டம்
டெல்லி அரசு தற்போது ஐஐடி குழுவிடம் விரிவான திட்டத்தை கேட்டுள்ளது. இந்த திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கவுள்ளது.
டெல்லியின் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் கோரும் பல மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால், தில்லி அரசும், மத்திய அரசும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எதற்காக நவம்பர் 20-21 தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன?
செயற்கை மழையை உருவாக்க குறைந்தபட்சம் 40% மேக மூட்டம் அவசியம் என ஐஐடி குழுவினர் கூறியுள்ளனர்.
நவம்பர் 20-21 தேதிகளில் மேக மூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கிடைத்தால் அந்த தேதிகளில் அரசும், ஐஐடி-யும் ஒரு பைலட் ஆய்வு நடத்த முடியும் அந்த நாட்களை தேர்வு செய்துள்ளது