
சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது
செய்தி முன்னோட்டம்
சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி பகுதியிலுள்ள கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் வீரபத்திர சுவாமியின் திருக்கோயில் அமைந்துள்ளது.
அதே பகுதியினை சேர்ந்த முரளி கிருஷ்ணன்(38)என்பவர் மது போதையில் இன்று(நவ.,10)காலை கோயிலில் நின்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் கையில் பெட்ரோல் குண்டு வைத்திருந்ததை கண்ட கோயில் பூசாரி மற்றும் பக்தர்கள் கோயிலிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளனர்.
அவர்களோடு முரளி கிருஷ்ணாவும் கோயிலில் இருந்து வெளியே வந்து, அடுத்த சில நிமிடங்களில் கோயிலை நோக்கி தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டினை வீசியுள்ளார்.
கோயிலின் வெளிப்புறம் விழுந்த அந்த குண்டு வெடித்து சிதறியது.
ஆனால் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
வெடி
போதையில் உளறிய ஆசாமி
இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறை, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்துகையில் அவர் போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் போதையில், கடந்த 4 ஆண்டுகளாக தான் இந்த கடவுளை வழிபடுவதாகவும், ஆனால் அந்த வீரபத்திரர் சாமி தனக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்றும் புலம்பியுள்ளார்.
இந்த காரணம் காவல்துறையினரையே சற்று அதிர வைத்துள்ளது.
இதற்கிடையே, தற்போது கைது செய்யப்பட்டுள்ள முரளி கிருஷ்ணன் ஏற்கனவே பல வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்
JUSTIN || சென்னை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு - அதிரவைத்த காரணம்#Chennai | #PetrolBomb #ThanthiTV pic.twitter.com/8nx1f3KwX2
— Thanthi TV (@ThanthiTV) November 10, 2023