நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரானது நவம்பர் மாதம் 3ம் வாரத்தில் துவங்குவது வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னரே இந்த கூட்டத்தொடர் நடந்து முடிந்து விடும். ஆனால் இந்தாண்டு 5 மாநில சட்டசபை தேர்தல் நடப்பதால் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதன் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 2ம் வாரத்தில் துவங்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. எனினும், டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னரே கூட்டம் நிறைவுபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய மசோதாக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று தகவல்
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மசோதாக்கள் வரும் டிசம்பரில் நடக்கவுள்ள கூட்டத்தொடரில் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிகிறது. தலைமை தேர்தல் ஆணையர் பதவி வகிப்பவர்கள் இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளனர். அவர்களை இம்மசோதா மந்திரிசபை செயலாளர் அந்தஸ்துக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது. இதனால் இந்த மசோதாவிற்கு முன்னாள் தேர்தல் ஆணையர்கள், எதிர்கட்சியினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், கடந்தாண்டு நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் CRPC, IPC மற்றும் சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதுவும் இம்முறை பரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாக்களை மத்திய அரசு உடனே நிறைவேற்றவும் வாய்ப்புள்ளது.