மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை
செய்தி முன்னோட்டம்
பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
இனி டெல்லி பதிவு எண்களைக் கொண்ட டாக்ஸிகள் மட்டுமே நகருக்குள் இயங்க அனுமதிக்கப்படும்.
முக்கியமாக ஓலா, ஊபர் போன்ற செயலிகள் மூலம் இயங்கும் டாக்ஸிகளுக்காக இந்த தடை விதிக்கப்ட்டுள்ளது.
அதிக வாகனங்கள் இயக்கப்பட்டால் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.
நேற்று டெல்லி காற்று மாசுபாடு குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி சாலைகளில் பல வண்டிகள் தலா ஒரு பயணியை மட்டும் ஏற்றி செல்வதாக கூறியது.
அப்படி ஒரு பயணிக்காக ஓடும் வண்டிகளை கட்டுப்படுத்துமாறு டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் நேற்று கேட்டு கொண்டது.
டக்ஜ்வ்க்
எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை
உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்த கருத்துக்களுக்கு இணங்க இன்று டெல்லி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காற்று மாசுவை கட்டுப்படுத்த GRAP நிலை 4 கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட போதிலும், மாசுபடுத்தும் வாகனங்கள் நகருக்குள் தொடர்ந்து நுழைவதாக டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கூறியுள்ளார்.
எனவே, எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
GRAP நிலை 4 கட்டுப்பாடுகள் என்பது நகருக்குள் கட்டுமான பணிகள் நடப்பதையும், நகருக்குள் மாசுபடுத்தும் லாரிகள் நுழைவதையும் தடுக்கிறது.
இந்நிலையில், தற்போது வெளி மாநில டாக்ஸிகளும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.