இந்தியா-அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தை துவக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளின் இடையே நல்லுறவு தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று(நவ.,10)டெல்லியில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல், இருதரப்பின் உறவுகளை வலுப்படுத்துதல், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பினை ஊக்குவித்தல் போன்ற பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக ஆண்டனி பிளிங்கன் மற்றும் லாயிட் ஆஸ்டின் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்கள்.
டெல்லி விமானநிலையம் வந்தடைந்த அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுக்கு வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
பேச்சுவார்த்தை துவங்கியது
#BreakingNews | இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை#India | #America | #Delhi | #PMModi | #JoeBiden | @PMOIndia pic.twitter.com/vWaEgX3crA
— Win News Prime (@winnewstamil) November 10, 2023