Page Loader
தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு
தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு

தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு

எழுதியவர் Nivetha P
Nov 08, 2023
05:48 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சி மற்றும் டி-பிரிவு பணியாளர்களுக்கு 2022-23ம் ஆண்டிற்கான 8.33% போனஸ் மற்றும் 11.67%கருணைத்தொகை என மொத்தம் 20%போனஸ் தொகையாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, போனஸ் சட்டத்தின்கீழ் வரும் பணியாளர்களுக்கு சம்பளத்தில் இந்த 20% போனஸ் தொகை வழங்கப்படும். இதனை தவிர்த்து தற்போது தற்காலிகமாக பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3,000 கருணை தொகையாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நவீன அரிசி ஆலைகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள், திறந்தவெளி சேமிப்பு மையங்கள், அனைத்து மண்டலங்கள் கிடங்குகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் 49,023 பணியாளர்களுக்கான ரூ.29 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

தீபாவளி போனஸ்