24 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழக வானிலை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்திற்குள் வலுவிழக்கூடும். மேலும், குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
நவம்பர் 8
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி மற்றும் தென்காசி
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்
ட்ஜ்வ்ல்ஸ்
நவம்பர் 9
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி
நவம்பர் 10
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
நவம்பர் 11
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
நவம்பர் 12 முதல் நவம்பர் 14 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.