Page Loader
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 09, 2023
06:11 pm

செய்தி முன்னோட்டம்

அறியப்படாத காரணங்களுக்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட எட்டு கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக கத்தார் அதிகாரிகளிடம் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரும், இந்திய போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கிய அலங்கரிக்கப்பட்ட அதிகாரிகள் ஆவர். அதிலிருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு, தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் கத்தார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிறுவனம், கத்தாரின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனமாகும். ஊடக செய்திகள்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீர்மூழ்கி கப்பல் பற்றிய அரசாங்க தகவல்களை கசிய விட்டதாகவும், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

card 2

செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் 

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், இந்தியா அரசு ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளது எனக்கூறினார். இந்த தீர்ப்பால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக இந்திய அரசு முன்னதாக கூறியிருந்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், வழக்கு விவரங்கள் இன்னும் அரசிற்கு கிடைக்கவில்லை என்றும், "இந்த தீர்ப்பு ரகசியமானது... சட்டக் குழுவுடன் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. நாங்கள் இப்போது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்." என அவர் தெரிவித்தார். தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா மற்றும் சௌரப் வசிஷ்ட் ஆகியோர், கடற்படையில் கேப்டன் பதவி வகித்தவர்கள் மற்றும் அமித் நாக்பால், பூர்ணேந்து திவாரி, சுகுணாகர் பகாலா, சஞ்சீவ் குப்தா ஆகியோர் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.