Page Loader
73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்த 97 வயது முதியவர் 
73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்த 97 வயது முதியவர்

73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்த 97 வயது முதியவர் 

எழுதியவர் Nivetha P
Nov 09, 2023
12:29 pm

செய்தி முன்னோட்டம்

கேரளா பாலக்காடு மாவட்டத்தினை பி.பாலசுப்ரமணியன் மேனன்(97), 73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் தொடர்ந்து பணியாற்றிய நிலையில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து கின்னஸ் உலக சாதனை புத்தக அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், "கேரளத்தினை சேர்ந்த பி.பாலசுப்ரமணியன் மேனன்(97) என்பவர் 73 ஆண்டுகள் 60 நாட்கள் வழக்கறிஞராக பணியாற்றி நீண்ட நாட்கள் வழக்கறிஞராக பணியாற்றிய நபர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பி.பாலசுப்ரமணியன், "என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு தங்கள் வழக்குகளை சம்மந்தப்பட்ட நபர்கள் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

சாதனை 

1950ம் ஆண்டு முதல் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு வருகிறார் 

மேலும் அவர், "எனது உடல்நலன் ஒத்துழைக்கும் வரை எனது பணியினை தொடர்ந்து செய்வேன்" என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், தனக்கு நீதிமன்றங்களில் நீண்ட நேரம் வாதிடுவதில் நம்பிக்கை இல்லை என்றும், தனது குறுக்கு விசாரணைகள் மற்றும் வாதங்கள் அனைத்தும் குறுகியதாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார். சென்னை சட்ட கல்லூரியில் தனது சட்ட படிப்பினை முடித்த பாலசுப்ரமணியன் மேனன், கேரளாவில் ஓர் பாரம்பரிய குடும்பத்தினை சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தனது 97 வயதிலும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்குகளை வாதாடும் இவர், கடந்த 1950ம் ஆண்டு தனது வழக்கறிஞர் பணியினை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.