' தூர்தர்ஷன் பொதிகை' சேனல், 'டிடி தமிழ்' என பெயர்மாற்றம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
செய்தி முன்னோட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று(நவ.,10)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர், 'நமது பாரத தேசம் ஓர் வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றக்கூடிய முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம்' என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து அவர், "வரும் ஜனவரி 14ம்.,தேதி பொங்கல் திருநாள் முதல் 'டிடி பொதிகை' தொலைக்காட்சி சேனலின் பெயர் 'டிடி தமிழ்' என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது" என்றும்,
"அதில் விவாதம் உள்ளிட்ட பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்" என்றும் தெரிவித்தார்.
மேலும் அவரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான தமிழக அரசின் வழக்கு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "இந்த விவாகரம் குறித்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்படி எதிர்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சரின் அறிவிப்பு
ஜனவரி 15 முதல் பொதிகை, இனி டிடி தமிழ் என ஒளிபரப்பாகும். அதில் விவாதம் உட்பட பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். நீட்டால் என்ன பாதிப்பு என முதல்வரிடம் கேள்வி கேட்க டிடி தமிழ் நிருபர்கள் தயாராகி வருகின்றனர்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் #DDTamil #PothigaiTV #NEET #BJP #DMK pic.twitter.com/pi0tvV9HR7
— Idam valam (@Idam_valam) November 10, 2023