
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும்(நவ.,8), நாளையும்(நவ.,9) இடிமின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்த அறிக்கையில், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்பத்தூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும்,
ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மத்தியகிழக்கு-தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40-45கி.மீ.,வேகத்திற்கும்,
நாளை மத்தியகிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 40-45கி.மீ.வேகத்திற்கும்,
இடையிடையே மணிக்கு 55 கி.மீ.,வேகத்திற்கும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் தகவலளிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கனமழை எச்சரிக்கை
திருப்பூர், கோவை நீலகிரி மாவட்டத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். pic.twitter.com/Ue1tXSvoCL
— Tirupur Talks (@TirupurTalks) November 8, 2023