Page Loader
காதி கிராமோதயா சங்கத்திற்கு ரூ.95 கோடி நிலுவை வைத்துள்ள மாநில அரசு
காதி கிராமோதயா சங்கத்திற்கு ரூ.95 கோடி நிலுவை வைத்துள்ள மாநில அரசு

காதி கிராமோதயா சங்கத்திற்கு ரூ.95 கோடி நிலுவை வைத்துள்ள மாநில அரசு

எழுதியவர் Nivetha P
Nov 09, 2023
12:31 pm

செய்தி முன்னோட்டம்

நாட்டிலேயே இந்தியாவின் தேசிய கொடியினை தயாரிக்கும் ஒரே அமைப்பு காதி கிராமோதயா சம்யுக்தா சங்கம் தான். கர்நாடகா மாநிலத்தில் தார்வாட் மாவட்டம் பெங்கேரி கிராமத்தில் அங்கீகாரம் பெற்று இந்த சங்கம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த சங்கத்திற்கு மாநில அரசு கடந்த 2019 ஆண்டு முதல் 2022 வரையிலான ரூ.95 கோடி நிலுவைத்தொகையினை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து இச்சங்கத்தின் செயலரான சிவானந்த மத்தபதி கூறியதாவது, "காதி உற்பத்திக்கு கர்நாடக அரசு கதர் மேம்பாட்டு வாரியமானது, நிதி மற்றும் மானியத்தினை வழங்கி வருகிறது" என்று தெரிவித்துள்ளார். அதன்படி இந்த சங்கத்தின் கீழ், 50-60 சங்கங்கள் செயல்பட்டு வரும் பட்சத்தில் 22,000 பேர் இந்த சங்கங்களில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

நிலுவை 

காந்தியின் கனவில் மாநில அரசு அஜாக்கிரதையாக செயல்படக்கூடாது - சங்கத்தின் செயலர்

'இந்த சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரசு வழங்கும் மானியம் தான் ஊதியமாக கொடுக்கப்படுகிறது' என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், 'கொரோனா காலமான 2019ம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை ரூ.95 கோடி ரூபாயினை மாநில அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது' என்றும், 'ஊதியம் வழங்கப்படாத காரணத்தினால் பலர் தங்கள் பணியினை விட்டு சென்றுள்ளனர்' என்றும் கூறினார். ,மேலும், 'இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர் சரணபசப்பா தர்ஷனாபூர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை' என்று குறிப்பிட்டுள்ள சங்கத்தின் செயலர் சிவானந்த மத்தபதி, 'காந்தியின் கனவில் மாநில அரசு அஜாக்கிரதையாக செயல்படக்கூடாது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.