இந்தியா: செய்தி
காலிஸ்தான் ஆதரவு அணிவகுப்பு தொடர்பாக கனடாவை தொடர்புகொண்ட இந்தியா
கனடா டொராண்டோவிலுள்ள மால்டனில் நடந்த நகர் கீர்த்தன் அணிவகுப்பில் காலிஸ்தான் சார்பு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதையடுத்து, தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்ததற்காக கனடாவை இந்தியா மீண்டும் சாடியுள்ளது.
'அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது பாஜக': சோனியா காந்தி
பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதாவும் அரசியல் ஆதாயத்திற்காக சமூகத்தில் வெறுப்புணர்வை வளர்த்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
3 மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றவும்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
அறிவிப்பு வெளியான மூன்று மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றுமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அனைத்து தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
14 புதிய அம்சங்களுடன் புதிய கிரிஸ்டா GX+ மாறுபாட்டை அறிமுகப்படுத்தியது டொயோட்டா இந்தியா
டொயோட்டா தனது இன்னோவா கிரிஸ்டாவின் GX+ மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது.
வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல்
டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் BMW காரில் வந்த நான்கு பேர் பல கிலோமீட்டர் தூரம் வரை காரைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் பலி
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஏழு வயது சிறுவன் இன்று உயிரிழந்தான்.
இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை: தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தெலுங்கானா, கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், விதர்பா பகுதி மகாராஷ்டிரா, கங்கை மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் நேற்று கடுமையான வெப்பம் இருந்தது. வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.
இந்தியாவின் பிரமிக்கவைக்கக்கூடிய மலர் பள்ளத்தாக்குகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
சுற்றிலும் பலவண்ண மலர்களுக்கிடேயே, ரம்மியமான சூழலை ரசிப்பது போல என்றாவது கனவு கண்டிருக்கிறீர்களா? இதற்காக வெளிநாடுகளுக்கு எல்லாம் பயணிக்க தேவையே இல்லை. நமது இந்தியா நாட்டிலேயே இது போன்ற அழகான, இயற்கையான, ரம்மியமான இடங்கள் இருக்கின்றது.
மீண்டும் தொடங்கப்பட உள்ளது நாகை - இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்து
நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்
காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு ஜெய்சங்கர் பதில்
அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை
காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடாவில் கைது
கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று இந்தியர்களைக் கைது செய்துள்ளதாக கனேடிய காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குறையும் வாக்குப்பதிவு சதவீதம்; காரணம் என்ன?
ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான, இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.
200 முக்கிய குழு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்: இந்தியா, மெக்சிகோவிற்கு வேலைகளை மாற்ற திட்டம்
கூகுளின் 'முக்கிய' குழுவிலிருந்து குறைந்தது 200 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல அடியாளை நியமித்தாரா இந்திய அதிகாரி? இந்தியா பதில்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் அடியாளை நியமித்ததாக தி வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.
பாலியல் புகார் சர்ச்சை: கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து இன்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட மணிப்பூர் பெண்கள்: வன்முறைக்கு உடந்தையாக இருந்த போலீஸ்
ஒரு வருடத்திற்கு முன் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
நூலிழையில் உயிர தப்பினார் அமித்ஷா: ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு
பீகாரில் உள்ள பெகுசராய் நகரில் இருந்து அமித்ஷா புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமித்ஷாவின் வீடியோ வழக்கு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ வழக்கில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் மே 1ஆம் தேதி சம்மன் அனுப்பியுள்ளனர்.
அக்டோபர் 2023 முதல் 31% இந்திய மசாலாக்கள் ஏற்றுமதியை நிராகரித்தது அமெரிக்கா
சால்மோனெல்லா மாசுபாட்டின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மஹாஷியன் டி ஹட்டி(MDH) பிரைவேட் லிமிடெடின் மசாலா பொருட்களின் ஏற்றுமதிகள் குறைந்துள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் சரக்கு வாகனம் லாரி மீது மோதியதால் 8 பேர் பலி, 23 பேர் காயம்
சத்தீஸ்கரின் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் டிரக் மீது மோதியதில் 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.
கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது
600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் சென்ற சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு தடுத்து நிறுத்தினர்.
செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம்
ஹரியானாவில் 12 வயது சிறுமி தனது செல்லப்பிராணியான ஒரு நாயின் இழப்பை தாங்க முடியாமல் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம்
இந்து மன்னர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை கடுமையாக சாடியுள்ளார்.
கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று ராஜினாமா செய்தார்.
2,500 ஐபிஎல் ரன்களை எடுத்து MI கேப்டன் ஹர்திக் பாண்டியா சாதனை
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தியன் பிரீமியர் லீக்கில்(ஐபிஎல்) 2,500 ரன்களை கடந்துள்ளார்.
2 மில்லியன் கார்களுக்கு மேல் விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் சாதனை
இந்தியாவின் வாகனத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான மாருதி சுஸுகி, 2024 நிதியாண்டில் இரண்டு மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி
சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
மக்களவை தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குபதிவு நிறைவு
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
EVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
இன்று மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம்
அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே மெசஜை படிக்கவும், அணுகவும் முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம், பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்க்ரிப்ஷனை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் வாட்ஸ்அப் தளம் மூடப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் WhatsApp தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சாலை அமைக்கும் சீனா; செயற்கைகோள் புகைப்படம் வெளியானது
இந்தியாவிற்கு பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சியில், சியாச்சின் மலைத்தொடருக்கு மிக அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா சாலையை அமைக்கிறது என சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகின்றன.
ரூ.1.2 கோடி விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது BMW i5 எலக்ட்ரிக் செடான்
BMW தனது i5 எலக்ட்ரிக் செடானை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், நாட்டில் உள்ளவர்களுக்கும் அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.
'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம்
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை "மிகவும் சார்புடையது" என்றும், மத்திய அரசு அதற்கு "எந்த முக்கியத்துவமும் வழங்காது" என்றும் வெளியுறவு அமைச்சகம் இன்று கூறியுள்ளது.
சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவில்,"அமெரிக்கா போன்ற பரம்பரை வரிச் சட்டம் வேண்டும்" என வாதிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் விலகி உள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக இலகுவான புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்டை உருவாகியுள்ளது DRDO
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஒரு பிரிவு, லெவல் 6 எனப்படும் மிக உயர்ந்த அச்சுறுத்தல் அளவைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, நாட்டிலேயே இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை (புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.