Page Loader
'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

எழுதியவர் Sindhuja SM
Apr 25, 2024
07:21 pm

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், நாட்டில் உள்ளவர்களுக்கும் அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதம் மூலம் பிரதமரிடம் உரையாற்றிய கார்கே, "எங்கள் தேர்தல் அறிக்கையில் எழுதப்படாத விஷயங்களை உங்கள் ஆலோசகர்கள் உங்களிடம் கூறி உங்களை தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்" என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், "இதெல்லாம் முடிந்த பிறகு, தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் ஒரு நாட்டின் பிரதமர் இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதை மக்கள் நினைவில் கொள்வார்கள்" என்றும் கூறியுள்ளார்.

இந்தியா 

பிரதமர் மோடி என்ன கருத்து கூறினார்?

ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு கார்கே இன்று பதிலளித்துள்ளார். தாய்மார்கள் மற்றும் மகள்களிடம் உள்ள தங்கத்தை கணக்கிடபட்டு, அந்த செல்வம் அதிக குழந்தைகள் இருப்பவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி, காங்கிரஸ் மீது அன்று குற்றம் சாட்டினார். "நம் சகோதரிகள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளியை வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் கணக்கிடுவார்களாம். தங்கம் காட்டுவதற்கு மட்டுமல்ல, அது ஒரு பெண்ணின் சுயமரியாதை. அது அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. காங்கிரஸ் அதை பறிக்க பார்க்கிறது" என்று பிரதமர் மோடி கூறியதற்கு கார்கே தற்போது பதிலளித்துள்ளார்.