Page Loader
கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா

கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா

எழுதியவர் Sindhuja SM
Apr 28, 2024
10:35 am

செய்தி முன்னோட்டம்

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று ராஜினாமா செய்தார். அர்விந்தர் சிங் லவ்லி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் தீபக் பபாரியாவுடன் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ராஜினாமா கடிதம் எழுதியுள்ள அவர், "ஊனமுற்றவராக" உணர்கிறேன் என்றும், டெல்லி காங்கிரஸ் பிரிவின் தலைவராக தொடர முடியாது என்றும் கூறியுள்ளார். பாபரியா மாநில விவகாரங்களை கையாள்வதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், பாபரியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களை வெளியேற்ற தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் லவ்லி கூறியுள்ளார்

ட்விட்டர் அஞ்சல்

டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா