LOADING...
இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் அமலுக்கு வருகிறதா? தொழிலாளர் அமைச்சகம் விளக்கம்
புதிய சட்டத்தின்படி இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் குறித்து தொழிலாளர் அமைச்சகம் விளக்கம்

இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் அமலுக்கு வருகிறதா? தொழிலாளர் அமைச்சகம் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2025
05:04 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. கடந்த 2025 நவம்பர் 21 அன்று, பழைய 29 தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாகப் புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இதன் பின்னணியில், இந்தியர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் முழுச் சம்பளம் கிடைக்குமா என்ற கேள்விக்கு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

விளக்கம்

4 நாட்கள் வேலை வாரம் பற்றிய விளக்கம்

புதிய தொழிலாளர் சட்டங்கள், வாராந்திர வேலை நேரத்தை ஒழுங்கமைப்பதில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்றன. இதன் மூலம், 4 நாட்கள் வேலை வாரம் சாத்தியமே, ஆனால் இது ஒரு கட்டாயச் சட்டம் அல்ல. நிறுவனங்களும் ஊழியர்களும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டால் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும். பல நிறுவனங்கள் தொடர்ந்து 5 அல்லது 6 நாட்கள் வேலை வார முறையையேப் பின்பற்றலாம். 4 நாட்கள் வேலை வாரம் அனுமதிக்கப்பட்டாலும், வாராந்திர மொத்த வேலை நேரம் 48 மணிநேரம் என்ற வரம்பு நிலையாகவே இருக்கும்.

12 மணிநேரம்

12 மணிநேர வேலை நிலவரம்

புதிய சட்டங்களின் கீழ், ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரை வேலை செய்யலாம். அவ்வாறுச் செய்தால், மீதமுள்ள 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் என்பது இடைவெளிகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வேலை நேரத்தையும் உள்ளடக்கியது. ஒருவேளை ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்தால், அந்த அதிகப்படியான நேரம் 'ஓவர்டைம்' எனக் கருதப்பட்டு, வழக்கமானச் சம்பள விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்தச் சலுகை, ஊழியர்களை நீண்ட மற்றும் சம்பளம் இல்லாத வேலை நேரத்தில் இருந்து பாதுகாப்பதோடு, நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் வேலை அட்டவணையைத் திட்டமிடுவதில் அதிகச் சுதந்திரத்தை வழங்குகிறது.

Advertisement

முக்கிய மாற்றங்கள்

புதிய தொழிலாளர் சட்டங்களில் உள்ள மற்ற முக்கிய மாற்றங்கள்

இந்தச் சட்டங்கள் மூலம், கிக் தொழிலாளர்கள் (Gig workers) மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் (Platform workers) முதன்முறையாகத் தொழிலாளர் சட்டங்களின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நல நிதிப் பங்களிப்புகள் ஆதார் இணைப்புடன் கூடிய யுனிவர்சல் கணக்கு எண்கள் (Universal Account Numbers) மூலம் போர்ட்டபிளாக இருக்கும். நிலையான கால ஊழியர்கள் இனி நிரந்தர ஊழியர்களுக்குச் சமமானச் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள். இதில் விடுமுறை, மருத்துவக் காப்பீடு மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் ஆகியவை அடங்கும். நிலையான கால ஊழியர்கள் தொடர்ந்து ஓர் ஆண்டு சேவைக்குப் பிறகு கிராஜுவிட்டி பெறத் தகுதியுடையவர்கள். முன்னர், இதற்கு 5 ஆண்டுகள் நிறைவு செய்ய வேண்டியிருந்தது.

Advertisement