Page Loader
3 மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றவும்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு 

3 மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றவும்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு 

எழுதியவர் Sindhuja SM
May 07, 2024
11:25 am

செய்தி முன்னோட்டம்

அறிவிப்பு வெளியான மூன்று மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றுமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அனைத்து தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பரப்புவதற்கு சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் ECI, அரசியல் கட்சிகளை எச்சரித்துள்ளது. தவறான தகவல்களை பரப்புதல், செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்களை உண்மை என்று நம்பவைப்பதற்கு எதிராக தேர்தல் ஆணையம் குரல் கொடுத்துள்ளது. தேர்தல் செயல்பாட்டில் போலி வீடியோக்களின் தாக்கம் குறித்து பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தியா 

தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது ECI 

அரசியல் கட்சிகள், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளை பயன்படுத்துவதைத் தடை செய்யவில்லை என்றும் ECI தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், தகவல்களை சிதைப்பதற்கும் தவறான தகவல்களை பரப்புவதற்கும் அத்தகைய கருவிகளைப் பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் கண்டிப்பாக தடை செய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "வாக்காளர்களின் கருத்துக்களை தவறாக வழிநடத்தும், சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தும்... வீடியோக்கள்." குறித்து மேலும் தேர்தல் ஆணையம் கவலை எழுப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகள், மற்றொரு நபரைப் போல் ஆள்மாறாட்டம் செய்யக் கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. நகைச்சுவைக்காக வெளியிடப்படும் வீடியோக்கள் மற்றும் கணக்குகள் குறித்து தெளிவாக எதுவும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.