அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு ஜெய்சங்கர் பதில்
அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை இந்தியா உட்பட பல நாடுகள் "அயல்நாட்டு வெறுப்பு" கொண்டவை என்று பைடன் கூறினார். இந்நிலையில், இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை(CAA) மேற்கோள் காட்டி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் வரவேற்புத் தன்மையை இந்த சட்டம் காட்டுகிறது என்று தெரிவித்தார். வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்கும் ஒரு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களும், இலங்கை தமிழர்களும் பயனடைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பொருளாதாரம் தள்ளாடுகிறது: ஜோ பைடன்
"இந்தியா எப்போதுமே... மிகவும் தனித்துவமான நாடாக இருந்து வருகிறது.. உலக வரலாற்றில், இது மிகவும் திறந்த சமூகமாக இருந்ததாக நான் கூறுவேன்... பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்," என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். "இந்தியாவுக்கு வர வேண்டிய தேவை உள்ளவர்களுக்கும், இந்தியாவுக்கு வர வேண்டும் என்று உரிமை கோருபவர்களுக்கும் அந்த உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் பொருளாதாரம் தள்ளாடுகிறது என்ற பைடனின் கருத்துக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.