'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம்
அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே மெசஜை படிக்கவும், அணுகவும் முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம், பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்க்ரிப்ஷனை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் வாட்ஸ்அப் தளம் மூடப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் WhatsApp தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா, தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இதன்படி நிறுவனங்கள் சாட் விவரங்களை கண்டறிந்து, அதனை உருவாக்குபவர்களை அடையாளம் காண வேண்டும் என கூறுகிறது. இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பை, அது வழங்கும் தனியுரிமை அம்சங்கள் காரணமாகவே மக்கள் பயன்படுத்துகின்றனர் என வழக்கறிஞர் மேலும் கூறினார்.
இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்!
இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்ற விதிகள் உலகில் வேறு எங்கும் இல்லை என்று குறிப்பிட்ட வழக்கறிஞர், பிரேசிலில் கூட இல்லை என்றார்.#WhatsApp #Meta #Facebook #Privacy #Encyrtion #EncryptedMessage #Data #DataPrivacy #Message #India #TNCTamil #TheNewsCircle #TNCTamilNews pic.twitter.com/kyyXTrYYfn— The News Circle - Tamil (@tnctamilnews) April 26, 2024