60 ஆண்டு நந்தா தேவி மர்மத்தால் கங்கை ஆற்றுக்கு இப்போது அச்சுறுத்தலா? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
செய்தி முன்னோட்டம்
இமயமலை தொடரின் உச்சியில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்குள் மறைந்த ஒரு பனிப்போர் ரகசியம் இப்போது மீண்டும்ச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது உயரமானச் சிகரமான நந்தா தேவிக்கு அருகே புதைந்திருக்கக்கூடிய அணுசக்தி மூலம் இயங்கும் ஒரு சாதனம், உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான கங்கையின் நீர்வழிகளை அச்சுறுத்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
மிஷன்
நந்தா தேவி மிஷனும், மறைந்த ரகசியமும்
இந்த சம்பவம் 1965 ஆம் ஆண்டில், சீனா தனது ஆரம்பக்கட்ட அணுசக்தித் திட்டங்களை உருவாக்கும் போது நடந்தது. அப்போது அமெரிக்காவின் சிஐஏ மற்றும் இந்தியாவின் ஐபி உளவுத்துறைகள் இணைந்து ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டன. இதன் நோக்கம், இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள சீன ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளைக் கண்காணிக்க, நந்தா தேவியின் உச்சியில் அணுசக்தி மூலம் இயங்கும் ஒரு கேட்கும் கருவியை நிறுவுவதாகும். இந்தக் கருவிக்கு சக்தி அளிப்பதற்காக, ரேடியோஐசோடோப்பு தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர் (RTG) பயன்படுத்தப்பட்டது. இது கிலோ கணக்கிலான புளூட்டோனியம் என்றக் கதிரியக்கப் பொருளை எரிபொருளாகக் கொண்டது. எதிர்பாராதப் புயல் மற்றும்ப் பனிப்புயலில் சிக்கிய அந்தக் கூட்டுக்குழு, அந்தச் சாதனத்தைப் பனிப்பாறையில் மறைத்து வைத்துவிட்டுத் திரும்பியது.
முயற்சி
மீட்பு முயற்சி
அடுத்தச் சீசனில் குழு திரும்பி வந்தபோது, அந்த RTG சாதனமும் அதன் புளூட்டோனியம் மையமும் காணாமல் போயிருந்தன. அவைப் பனிச்சரிவு அல்லதுப் பனிப்பாறைக்குள் ஆழமாகப் புதைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த காணாமல் போன சாதனம் தான் இன்று மிகப்பெரியச் சுற்றுச்சூழல் கேள்வியை எழுப்பியுள்ளது. நந்தா தேவியின் பனிப்பாறைகள் தான் ரிஷி கங்கா மற்றும் தௌலி கங்கா நதிகளின் ஆதாரமாக உள்ளன. இந்த நதிகள் தான் இறுதியில் கங்கையாக மாறி, பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன. பனிக்குள் ஆழமாகப் புதைந்துள்ள நிலையில், RTG சாதனம் உடனடியாக ஆபத்தை ஏற்படுத்தாது என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
கதிரியக்கம்
கதிரியக்க அபாயம்
ஆனால், காலப்போக்கில் அந்தக் கவசத்தில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால், அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொருட்கள் உருகும் பனிநீர் மற்றும் வண்டல் மண்ணுடன் கலந்து, கங்கை நதிப் படுகையை நோக்கிப் பாயக்கூடும். 1978 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் நடத்திய ஆய்வில், உள்ளூர் நதிகளில் புளூட்டோனியம் கதிரியக்கம் கண்டறியப்படவில்லை, ஆனால் சாதனத்தின் இருப்பிடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இமயமலைப் பனிப்பாறைகள் விரைவாக உருகி வருவதும், 2021 ஆம் ஆண்டு சாமோலி வெள்ளம் போன்றச் சீரழிவுச் சம்பவங்கள் அதிகரிப்பதும், புதைந்திருக்கும் இந்தச் சாதனத்தின் அச்சுறுத்தலைப் பெரிதாக்கியுள்ளன. தொடர்ந்துப் புவி வெப்பமடைதல் மற்றும் பனிப்பாறை உருகுதல் ஆகியவை RTG சாதனத்தின் எச்சங்களை ஒருநாள் வெளிப்படுத்தவோ அல்லதுச் சிதைக்கவோ கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.