மக்களவை தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குபதிவு நிறைவு
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.7% வாக்குகள் பதிவாகின. திரிபுராவில் 68.92% வாக்குகள் பதிவாகியுள்ளன, மகாராஷ்டிராவில் 43.01% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை மற்றும் திருமணங்களால் வாக்குப்பதிவுக்கு இடையூறு இருக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அச்சம் தெரிவித்திருந்தது. ஆனால், இன்றைய வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட நன்றாகவே நடைபெற்றுளளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. தேர்தல்களின் போது வன்முறை அதிகம் நடக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ராய்கஞ்ச், டார்ஜிலிங் மற்றும் பலூர்காட் ஆகிய மூன்று தொகுதிகளில் எந்த இடையூறும் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதன்முறையாக வாக்களித்த ப்ரூ குடியேறியவர்கள்
1997 இல் மிசோரமில் இருந்து இடம்பெயர்ந்த பிறகு முதன்முறையாக, சுமார் 37,000 ப்ரூ குடியேறியவர்கள், இன்று மக்களவைத் தேர்தலில் வாக்களித்தனர். இவர்களுக்கு இப்போது திரிபுராவில் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 1997 இன மோதல்களுக்குப் பிறகு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வடக்கு திரிபுரா மாவட்டத்தில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் ப்ரூ குடியேறியவர்கள் வசித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் திரிபுராவில் நாங்கள் முதல்முறையாக வாக்களிக்கிறோம் என்று மிசோரம் ப்ரூ இடம்பெயர்ந்த மக்கள் மன்றத்தின் பொதுச்செயலாளர் புருனோ எம்ஷா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளார். அசாம் மற்றும் பீகாரில் தலா 5, சத்தீஸ்கரில் 3, கர்நாடகாவில் 14, கேரளாவில் 20, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, மணிப்பூர் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் இன்று வாக்களித்தனர்.