அமித்ஷாவின் வீடியோ வழக்கு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன்
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ வழக்கில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் மே 1ஆம் தேதி சம்மன் அனுப்பியுள்ளனர்.
விசாரணைக்காக அவரது மின்னணு சாதனங்களையும் கொண்டு வருமாறு போலீசார் அவரிடம் கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை அகற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது.
அனைத்து இடஒதுக்கீடுகளையும் ஒழிப்பதற்கு அவர் குரல் கொடுப்பது போன்ற கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், இந்த வீடியோ பொய்யானது என்று இன்று தெரிவித்த உள்துறை அமைச்சகம் அந்த சித்தரிக்கப்பட்ட வீடியோவுக்கு எதிராக இன்று காவல்துறையில் புகார் அளித்தது.
இந்தியா
பாஜக இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 153/153A/465/469/171G மற்றும் 66C ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, சிறப்புப் பிரிவின் உளவுத்துறை இணைவு மற்றும் மூலோபாய நடவடிக்கைகள் (IFSO) பிரிவு இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கியது.
இதற்கிடையில், பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்(ஆர்எஸ்எஸ்) இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாகக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் தாக்குதலைத் தொடுத்துள்ளன.
தெலுங்கானாவில் ஏப்ரல் 23-ம் தேதி நடந்த 'விஜய சங்கல்ப் சபா'வின் போது பேசிய அமித் ஷா, அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், "அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான முஸ்லிம் இடஒதுக்கீடுகள் ஒழிக்கப்படும்" என்று அந்த சித்தரிக்கப்பட்ட வீடியோவில் அமித்ஷா பேசி இருக்கிறார்.