Page Loader
செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம் 

செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம் 

எழுதியவர் Sindhuja SM
Apr 28, 2024
04:30 pm

செய்தி முன்னோட்டம்

ஹரியானாவில் 12 வயது சிறுமி தனது செல்லப்பிராணியான ஒரு நாயின் இழப்பை தாங்க முடியாமல் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய நிலையில் அந்தத் சிறுமியின் உடலை கண்ட அவரது தாய், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். "சில நாட்களுக்கு முன்பு தனது செல்லப்பிராணியான ஒரு நாய் இறந்ததால் அந்த 12 வயது சிறுமி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து அந்த சிறுமியின் மனநிலை சரியில்லை" என்று வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். ஐந்து நாட்களுக்கு முன்பு, தங்கள் செல்ல நாயை அந்த சிறுமியின் குடும்பம் இழந்தது. அந்த நாயை தனது தோழன் போல நினைத்து வந்த அந்த சிறுமி, அப்போதிருந்து, சரியாக சாப்பிட மறுத்துவிட்டாள்.

இந்தியா 

 12 வயது சிறுமியின் துயரத்தை யாராலும் தீர்க்க முடியவில்லை

அவளது குடும்பத்தினர் அவளை ஆறுதல்படுத்த முயன்ற போதிலும், நாய்க்குட்டியை இழந்த அந்த 6 ஆம் வகுப்பு மாணவியின் துயரத்தை யாராலும் தீர்க்க முடியவில்லை. நேற்று மாலை, சிறுமியின் தாயும் அவளது சகோதரியும் வழக்க போல் மளிகை கடைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது வீட்டில் தனியாக இருந்த அந்த 12 வயது சிறுமி, தனது வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவெடுத்தாள். "கடந்த 3 மாதங்களாக நாய்க்குட்டியை வளர்த்து வந்த அவள், அந்த நாய் இறந்த சோகத்தை தாங்கி கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.