நூலிழையில் உயிர தப்பினார் அமித்ஷா: ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு
பீகாரில் உள்ள பெகுசராய் நகரில் இருந்து அமித்ஷா புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், 59 வயதான உள்துறை அமைச்சர் அமித்ஷா நூலிழையில் உயிர தப்பினார். தேர்தல் பேரணிக்காக பீகார் சென்றிருந்த அமித்ஷா அங்கிருந்து திருப்பும் போது, அவர் ஏறிய ஹெலிகாப்டர் புறப்படும் போது வலப்புறமாக சாய்ந்து தரையில் மோத இருந்தது. இந்நிலையில், சுதாரித்த பைலட் கட்டுப்பாட்டைத் திரும்பப் பெற்று ஹெலிகாப்டரை மீட்டெடுத்தார். பீகாரில் 16 இடங்களில் போட்டியிடும் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியுடன் இணைந்து பாஜக 17 இடங்களில் போட்டியிடுகிறது. மற்ற கூட்டணிக் கட்சிகளான சிராக் பாஸ்வானின் எல்ஜேபி மற்றும் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா முறையே 5 மற்றும் 1 இடத்தில் போட்டியிடுகின்றன.