இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார்.
முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள்
தமிழகத்திற்கு காவிரிநீர் சரிவர வராத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சர்வதேச விளையாட்டு வீரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம்
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தஹாவூர் ராணா நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.
சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள்
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால், டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல ராணுவ வீரர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.
10 நாட்களில் 1,616 உறுப்பு தான விண்ணப்பங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
உடல் உறுப்பு தானம் செய்வோர்களுக்கு இனி இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.,23ம்தேதி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள் என மொத்தம் 650க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வேறு நபரின் பெயருக்கு மாற்றும் வசதி
நம்முள் பலர் பயணம் செய்வதற்காக ரயில்களின் டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்வோம்.
ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழா-காணொளியில் மோடி உரை
வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழா இன்று(அக்.,5) சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் நடந்தது.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது
மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் வெடித்த வன்முறையால், இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், கலவரக்காரர்கள் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
உணவுத்தரம் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் நம்பர் - தமிழக அரசு
உணவுத்தரம் குறித்து தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி முதல் ஆய்வு செய்ய துவங்கினர்.
காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி துவக்கி வைதார்.
பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கை.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு!
விமானப் பயணங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், பாலின ரீதியிலான இருக்கை வசதியை வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
பெண்களுக்கு அரசு வேலையில் 35% இட ஒதுக்கீடு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
மத்திய பிரதேச அரசு, அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீட்டை தற்போது சட்டமாக்கி உள்ளது.
என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி
ஆந்திரா மாநிலத்தில் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியானது, கடந்த தேர்தலில் பாஜக.,தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டது.
போராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும்,
சிக்கிம் திடீர் வெள்ளபெருக்கு: 14 பேர் மரணம், 102 பேர் மாயம்
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இவர்களோடு, பலர் சுற்றுலா பயணிகளும் மாயமானதாகவும் கூறப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள், நேற்று(அக்.,4) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, இடைநிலை ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், புதிய பணி நியமனத்திற்கான தேர்வினை நடத்தக்கூடாது என்று டெட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் என மொத்தம் 3 வகையான ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
திருமணத்திற்கு ₹200 கோடி- அமலாக்கத்துறை வளையத்தில் மகாதேவ் செயலி சிக்கியதன் பின்னணி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த திருமணத்திற்கு, ₹200 கோடி ரொக்கமாக செலவு செய்ததன் விளைவாக, தற்போது அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் மகாதேவ் செயலி உரிமையாளர் சௌரப் சந்திரகர்.
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது.
தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - மா.சுப்பிரமணியம்
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் திடீர் ஒத்திவைப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்னும் தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார்.
உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் 'உஜ்வாலா' திட்டத்தினை கடந்த 2016ம்ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த துவங்கியது.
ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங்
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங்கை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் பேறுகால இறப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(அக் 3) 42ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 38ஆக பதிவாகியுள்ளது.
வீடியோ: சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்தார் ராகுல் காந்தி
உலக விலங்குகள் தினத்தன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு இதமான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
புது பொலிவுடன் படுக்கை வசதியுடனான வந்தே பாரத் ரயில் - வெளியான புகைப்படங்கள்
முழுக்க முழுக்க இந்தியா தயாரிப்பான வந்தே பாரத் ரயில் சேவைகள் தற்போது நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த குஜராத் மருத்துவர்கள்
இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்களில், தமிழ்நாடு தான் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக உள்ளது.
கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் - அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் பரவி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் இரட்டை இருக்கை விமானம் அறிமுகம்
முதல் LCA தேஜாஸ் இரட்டை இருக்கை விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இன்று(அக் 4) இந்திய விமானப்படையிடம் (IAF) ஒப்படைத்தது.
வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்ட அவலம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அண்மை காலமாகவே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.
ஆவின் நிறுவன பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50%மாக குறைப்பு
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் விற்பனை செய்து வருகிறது.
சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் நேற்று(அக் 3) இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல்
சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் நேற்று(அக் 3) டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்
விசிக கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் காய்ச்சல் காரணமாக கடந்த செப்.,26ம் தேதி சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.