அடுத்த செய்திக் கட்டுரை

வீடியோ: சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்தார் ராகுல் காந்தி
எழுதியவர்
Sindhuja SM
Oct 04, 2023
02:54 pm
செய்தி முன்னோட்டம்
உலக விலங்குகள் தினத்தன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு இதமான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவிற்கு சென்றிருந்தபோது, ஒரு ஜாக் ரஸ்ஸல் டெரியர் இன நாய்க்குட்டியை தத்தெடுத்திருக்கிறார்.
அதற்கு நூரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
அந்த நாய்க்குட்டியை கோவாவில் இருந்து டெல்லிக்கு அழைத்து சென்ற அவர், தனது தாயும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்திக்கு அதை பரிசாக வழங்கி இருக்கிறார்.
இந்நிலையில், உலக விலங்குகள் தினமான இன்று அவர் இது தொடர்பான ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி அந்த நாய்க்குட்டியை எங்கிருந்து அழைத்து வந்தார் என்பதும், அவர் தனது தாயை எப்படி ஆச்சர்யப்படுத்தினார் என்பதும் காட்டப்பட்டுள்ளது.