Page Loader
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வேறு நபரின் பெயருக்கு மாற்றும் வசதி
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வேறு நபரின் பெயருக்கு மாற்றும் வசதி

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வேறு நபரின் பெயருக்கு மாற்றும் வசதி

எழுதியவர் Nivetha P
Oct 05, 2023
05:56 pm

செய்தி முன்னோட்டம்

நம்முள் பலர் பயணம் செய்வதற்காக ரயில்களின் டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்வோம். ஆனால் பயணத்தை மேற்கொள்ள முடியாத பட்சத்தில் அதனை நாம் ரத்து செய்து விடுகிறோம். ஆனால் அவ்வாறு ஒரு நபரின் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டினை அவரால் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில், வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றும் வசதி ரயில்வேயில் உள்ளது. இது பலருக்கும் தெரியாத ஒன்றாகும். அதன்படி இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே அதிகபட்சமாக கோவையில் 30 பேர், ஈரோட்டில் 42 பேர், சேலத்தில் 27 பேர் என மொத்தம் சேலம் கோட்டத்தில் 126 பேர் பயன்பெற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்பதிவு 

24 மணிநேரத்திற்கு முன்னர் கடிதம் அளித்து குடும்பத்தார் பெயரில் மாற்றிக்கொள்ளலாம் 

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், முன்பதிவு செய்த ஓர் நபர் தனது பயணத்தினை ரத்து செய்ய வேண்டியிருந்தால் 24-மணிநேரத்திற்கு முன்னர் ரயில்நிலைய முதன்மை டிக்கெட் கண்காணிப்பாளரிடம் ஓர் கடிதத்தினை அளிக்கவேண்டும். அதன்படி, அந்த நபரின் தந்தை, தாய், மனைவி, கணவன், சகோதரர், சகோதரி, மகன், மகள் உள்ளிட்டோருக்கு தங்கள் பயண முன்பதிவினை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதேபோல் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கூட்டாக பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்து அதில் யாரேனும் வரமுடியாத நிலை ஏற்படுகையில் 48 மணிநேரத்திற்கு முன்னர் பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடம் கடிதம் வாங்கி ரயில்நிலையத்தில் அளித்து தனது சகமாணவர் பெயரில் டிக்கெட்டினை மாற்றிக்கொள்ளலாம். இதற்கான கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட்ட மாட்டாது என்றும் கூறப்படுகிறது.