மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம்
செய்தி முன்னோட்டம்
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தஹாவூர் ராணா நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றத்தில் ஆஜரான ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியிருந்தார்.
ராணாவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு மனு தாக்கல் செய்ய நவம்பர் 9 ஆம் தேதி வரை காலாவகாசத்தை நீட்டித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிக்கப்படும் முன், அவர் அக்டோபர் 10 ஆம் தேதி மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தார்.
ராணாவின் மனு மீது அமெரிக்க அரசு டிசம்பர் 11 ஆம் தேதி பதிலளிக்கும்.
2nd card
மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு மூலமாக செயல்பட்டவர்
தற்போது அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள தஹாவூர் ராணா கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு மூலமாக செயல்பட்டவர்.
மும்பை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டிய பாகிஸ்தானி- அமெரிக்க தீவிரவாதியான டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் ராணா தொடர்புகளை கொண்டிருந்தார்.
ராணா கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிடிபட்டார்.
கடந்த மே 16 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ராணாவை நாடு கடத்த அனுமதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவுக்கு எதிராக ராணா நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.
தற்போது ராணா தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.