பெண்களுக்கு அரசு வேலையில் 35% இட ஒதுக்கீடு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
மத்திய பிரதேச அரசு, அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீட்டை தற்போது சட்டமாக்கி உள்ளது. இந்த இட ஒதுக்கீடு, வனத்துறையை தவிர அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். 1997 மத்திய பிரதேச குடிமைப் பணிகள்(பெண்களை நியமனம் செய்வதற்கான சிறப்பு ஏற்பாடு) சட்டத்தை திருத்தி இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தற்போது இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பணிகளை சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக அரசு செய்து வருகிறது. மத்திய பிரதேச அரசு பெண்களுக்காக லட்லி பஹானா யோஜனா திட்டம், முக்கிய மந்திரி கன்யாடமன் யோஜனா போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.