பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை தீவு திடலில் நடந்த விழாவில், சைதாப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 148 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகளுக்கு முதலமைச்சர் ஆட்டோக்களை வழங்கினார். மேலும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பத்தாயிரம் உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.