Page Loader
தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - மா.சுப்பிரமணியம் 
தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - மா.சுப்பிரமணியம்

தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - மா.சுப்பிரமணியம் 

எழுதியவர் Nivetha P
Oct 04, 2023
07:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 15,236 உணவகங்களில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில் 1,572 உணவகங்களில் தரமற்ற உணவுகள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் தமிழகத்தில் ரூ.12.56 கோடி மதிக்கத்தக்க 191.1 டன் எடைகொண்ட குட்கா மற்றும் பான் மசாலாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அபராதம்