NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
    காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 04, 2023
    10:52 am

    செய்தி முன்னோட்டம்

    சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் நேற்று(அக் 3) இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் திடீரென அதிகமாக மழை பெய்ததால், டீஸ்டாவின் நீர் மட்டம் திடீரென உயர்ந்தது.

    சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நிலைமை மேலும் மோசமாகி, அந்த ஆற்றின் நீர்மட்டம் 15-20 அடி உயரம் வரை உயர்ந்தது.

    இதனால், சிங்டம் அருகே பர்டாங்கில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தகவ்க்ன்

    உச்சக்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ள சிக்கிம் அரசு

    இந்த திடீர் வெள்ளம் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள பல இராணுவ நிறுவனங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேதத்தின் முழு அளவை மதிப்பிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

    டீஸ்டா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த சிங்தாம் கால்வாய்ப் பாலம் வெள்ளத்தால் இடிந்து விழுந்தது.

    மேற்கு வங்கத்தை சிக்கிமுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10ன் பல பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    இந்த திடீர் வெள்ளம் காரணமாக பல சாலைகள் துண்டிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

    சிக்கிம் மாநிலத்தில் உச்சக்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ள சிக்கிம் அரசு, டீஸ்டா நதியிலிருந்து விலகி இருக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

    மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிக்கிம்
    மேற்கு வங்காளம்
    இந்தியா
    வெள்ளம்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    சிக்கிம்

    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு இந்தியா
    சிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம் இந்தியா
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  முதல் அமைச்சர்

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் பாஜக
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    இந்தியா

    வீடியோ: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் 2வது பதக்கம் வென்ற கினான் செனாய் ஆசிய விளையாட்டுப் போட்டி
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மத்திய பிரதேசம்
    3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கம் வென்று அவினாஷ் சேபிள் சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025