மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் வெடித்த வன்முறையால், இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், கலவரக்காரர்கள் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பட்சோய் காவல் நிலையம் அருகில் புதிய கெய்தெல்மன்பி பகுதியில், நேற்று இரவு 10 மணி அளவில் வன்முறை வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வீடுகளுக்கு தீ வைத்து பதட்டமான சூழ்நிலையை உண்டாக்கி விட்டு, குற்றவாளி தப்பி ஓடியதாகவும், தீயணைப்புப்படையினரும், பாதுகாப்புப்படையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின் கூட்டமாக கூடிய மெய்தேய் இனத்தைச் சேர்ந்த பெண்கள், பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும், பதற்றத்தை தணிக்க கூடுதல் படைகள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
Fresh violence breaks out in Manipur's Imphal West district. At least 2 houses set ablaze, several rounds of bullets fired: Police
— Press Trust of India (@PTI_News) October 5, 2023