Page Loader
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எம்பி ஜெகத்ரட்சகன் திமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

எழுதியவர் Srinath r
Oct 05, 2023
09:16 am

செய்தி முன்னோட்டம்

திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அடையாறு வீடு, தி நகரில் உள்ள நட்சத்திர விடுதி மற்றும் பூந்தமல்லியில் உள்ள அவரது கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாபிராமில் உள்ள எம்பியின் வீட்டில் சோதனை செய்த சென்ற அதிகாரிகள் அங்கிருந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால், பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் தொடர்பான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து ₹89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தி நகரிலுள்ள அவரது வீட்டை சோதனையிடும் அதிகாரிகள்