Page Loader
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

எழுதியவர் Nivetha P
Oct 04, 2023
05:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் பேறுகால இறப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் தங்கள் ஊட்டச்சத்தை உறுதி செய்யக்கூடிய திட்டங்களும் செயல்பாட்டிலுள்ளது. எனினும், பிரசவத்தின் போதான மரணத்தினை குறைக்க முடிந்ததே தவிர, முழுமையாக தடுக்க இயலவில்லை. இதனிடையே கடந்தாண்டு ஏப்ரல் முதல் தற்போதைய மார்ச் மாதம் வரையான பேறுகால இறப்புகள் குறித்து தமிழக சுகாதாரத் துறை ஆய்வு ஒன்றினை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆய்வின் மூலம், கடந்த ஓராண்டில் மட்டும், 479 கர்ப்பிணிகள் பிரசவத்தின் பொழுது உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முக்கிய காரணங்களுள் 20% அதிக ரத்த போக்கு மற்றும் 20% உயர் ரத்த அழுத்தம் ஆகியன உள்ளதாக தெரிகிறது.

மரணம் 

கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் 

மேலும், 10% இதய பாதிப்பால் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து, ரத்த கிருமி நோய்தொற்று, நரம்பு சார் பாதிப்புகள் என தலா 9% மரணத்திற்கு காரணமாக உள்ளதாம். அதேபோல், கல்லீரல் பாதிப்பால் 4%, கருக்கலைப்பின் பொழுது 5%, 7% நுரையீரல் பாதிப்புகளாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், கர்ப்பக்காலத்தில் உயர் ரத்த அழுத்தம், ரத்த அளவுகளில் மாறுபாடுகள் உள்ளிட்டவை ஏற்படுவது வழக்கம். அதனை சரியான முறையில் கட்டுக்குள் வைக்கவில்லையெனில் அதன் பாதிப்பு தீவிரமடையும் என்று கூறியுள்ளார். பிரசவத்தின் பொழுது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் வலிப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில். அது மரணத்திற்கு வழிவகுக்க அதிகளவு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.