10 நாட்களில் 1,616 உறுப்பு தான விண்ணப்பங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
உடல் உறுப்பு தானம் செய்வோர்களுக்கு இனி இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.,23ம்தேதி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, உறுப்புத்தானம் செய்ய இன்றளவும் பலர் தயக்கம் காட்டி வந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பினை தொடர்ந்து உறுப்பு தானம் செய்ய பலரும் முன்வந்துள்ளனர். அதன்படி அறிவிப்பு வெளியாகி 10 நாட்களிலேயே 1,616 பேர் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்து அதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னர் உறுப்பு தானத்திற்கு இந்தளவு மக்கள் முன்வந்ததில்லை என்று கூறியுள்ளார்.