சர்வதேச விளையாட்டு வீரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
செய்தி முன்னோட்டம்
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
வேலை வாய்ப்பு கோரி பதிவு செய்யவேண்டிய விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியான விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களை இணைத்து வரும் அக்.,31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
தகுதியான சர்வதேச விளையாட்டு போட்டிகள் குறித்த விவரங்கள்
மேலும், சர்வதேச விளையாட்டு குழுவால் 4 அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஐஓசி அங்கீகரித்து ஐஸ்ப்-ன் கீழ் 4 அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் போன்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்து நடத்திவரும் உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் போன்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்டவைகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.