உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு
செய்தி முன்னோட்டம்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் 'உஜ்வாலா' திட்டத்தினை கடந்த 2016ம்ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த துவங்கியது.
இத்திட்டத்திற்கு கீழ் சமையல் எரிவாயு பெறுவோருக்கு சந்தை விலையினை விட ரூ.200 குறைவாகவே வசூலிக்கப்படும்.
இந்நிலையில், தற்போது இத்திட்டத்திற்கு கீழ் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு மேலும் ரூ.100 விலை குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன்படி இனி ரூ.300 மானியமாக குறைக்கப்பட்டு வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.
இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரகம் அளித்துள்ள நிலையில், இதற்கான அறிவிப்பினை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையில் ரூ.200'ஐ மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
உஜ்வாலா திட்டம்
#BREAKING | உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ₹100 குறைப்பு!#SunNews | #UjjwalaYojana | #GasCylinder pic.twitter.com/mUFZynMGWN
— Sun News (@sunnewstamil) October 4, 2023