
போராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்
செய்தி முன்னோட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும்,
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் புதிய நியமன தேர்வுகளை நடத்தக்கூடாது என்று டெட் தேர்வெழுதி தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் என 3 வகையான ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில அறிவிப்புகளை அறிவித்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த 3 வகையான ஆசிரியர்கள் சங்கங்களும் தொடர் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று(அக்.,5)அவர்களை கைது செய்த காவல்துறை, சமூக நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
இதனிடையே, தற்போது தங்கள் போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
போராட்டம் வாபஸ்
#BREAKING || கைது செய்யப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்
கைதாகி திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வாபஸ் பெறுவதாக அறிவிப்பு#teachersprotest | #chennai pic.twitter.com/Oep37Ekyog — Thanthi TV (@ThanthiTV) October 5, 2023