
கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் - அதிர்ச்சி தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் பரவி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
எனினும், மாநிலம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் டெங்கு அறிகுறிகள் கொண்ட 51 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
டெங்கு பரவல்
கும்பகோணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் பாதிப்பு.... pic.twitter.com/uhpew1zg8H
— கும்பகோணம் மாவட்டம் | Kumbakonam District (@Kumbakonam_dist) October 4, 2023