Page Loader
புது பொலிவுடன் படுக்கை வசதியுடனான வந்தே பாரத் ரயில் - வெளியான புகைப்படங்கள் 
புது பொலிவுடன் படுக்கை வசதியுடனான வந்தே பாரத் ரயில் - வெளியான புகைப்படங்கள்

புது பொலிவுடன் படுக்கை வசதியுடனான வந்தே பாரத் ரயில் - வெளியான புகைப்படங்கள் 

எழுதியவர் Nivetha P
Oct 04, 2023
02:52 pm

செய்தி முன்னோட்டம்

முழுக்க முழுக்க இந்தியா தயாரிப்பான வந்தே பாரத் ரயில் சேவைகள் தற்போது நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கி.மீ.,வேகத்திற்கு பயணிக்கக்கூடிய இந்த ரயில் முழுவதும் ஏசி வசதியுடையதாகும். அதிவேக ரயில் சேவை என்றால் வந்தே பாரத் ரயில் தான் என்றாலும், இதில் படுக்கை வசதி கிடையாது. அமர்ந்திருக்கும் வசதி மட்டுமே செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதன் இருக்கையினை சற்று சாய்த்து ஓய்வெடுக்கலாம். இதன் காரணமாக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டது குறிப்பிடவேண்டியவை.

ஸ்லீப்பர் கோச் 

புதிய அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஸ்லீப்பர் கோச் 

இந்நிலையில் தான் அடுத்தாண்டு 2024ல் படுக்கை வசதியுடனான பெட்டிகள் வந்தே பாரத் ரயிலில் இணைக்கப்பட போவதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், இந்த ரயில் பெட்டிகளின் புகைப்படங்களை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த கோச்கள் அகலமான படுக்கைகள், அழகான உட்புறங்கள், விசாலமான கழிப்பறைகள், ஒரு பேன்ட்ரி, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளால் நெடுந்தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு மிக வசதியான பயணத்தினை வந்தே பாரத் ரயில் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இத்தகைய வசதிகளால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.