அமெரிக்கா: செய்தி
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி
ஜோ பைடன் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை "நம்பமுடியாத அளவிற்கு திறமையானவர்" என்றும், நவீன இந்திய-அமெரிக்க உறவுகளின் "கட்டமைப்பாளர்" என்றும் புகழ்ந்துள்ளார்.
அமெரிக்க-இந்திய உறவுக்கான அளவை வகுப்பது மிகவும் கடினம்- வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு
அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவுக்கான அளவை வகுப்பது கடினம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு
இறுதி நேரத்தில் கையெழுத்தான குறுகிய கால நிதி மசோதாவால் அமெரிக்க அரசு முடங்குவது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூயார்க் நகரம்: வைரலாகும் வீடியோக்கள் ஒரு பார்வை
வடகிழக்கு அமெரிக்காவில் ஒரே இரவில் பெய்த கனமழையால் நியூயார்க்கின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்: மெட்ரோ மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
இரவு முழுவதும் பெய்த கனமழையால் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடங்கியுள்ளது.
'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்
ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே "நிலையான" உறவு உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது உலகின் முதல் பறக்கும் கார்
உலகின் முதல் பறக்கும் காரின் மாதிரியை அமெரிக்காவில் நடைபெற்று வரும் டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தியிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த 'அலெஃப் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம்.
அமெரிக்காவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட போட்டோஸ் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்
அமெரிக்காவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'போட்டோஸ்' (Photos) செயலியை பொதுப்பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வெளியிட்டு வருகிறது கூகுள். இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட செயலியில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது கூகுள்.
ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் பணிமாற்றம்
ஆந்திரா மாணவி ஜான்வி மரணத்தை பற்றி கிண்டலடித்த காவலதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்- விவேக் ராமசாமி
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளின் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய நடந்த விவாதத்தில் விவேக் ராமசாமி பேசியுள்ளார். அவரின் இந்த கருத்து பலரையும் சற்றே பின்வாங்க வைத்துள்ளது.
அமெரிக்கா திரும்பினார் வடகொரியாவால் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்
கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமாக வடகொரிய எல்லையை கடந்த அமெரிக்க ராணுவ வீரர் டிராவீஸ் கிங் மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த ஆண்டில் இதுவரை 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா
இந்த ஆண்டில் இதுவரை 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கி உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடந்த 78வது ஐக்கிய நாடுகள் பொது சபைக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்றிருந்தார்.
11வது முறை, ரகசிய பாதுகாப்பு ஏஜென்டை கடித்த அமெரிக்க அதிபர்-இன் வளர்ப்பு நாய்
'கமாண்டர்' என பெயரிடப்பட்டுள்ள, ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய், பாதுகாப்பு ஏஜென்டை கடிப்பது இது பதினோராவது முறையாகும்.
முடிவுக்கு வந்தது ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம்
கடந்த 148 நாட்களாக ஊதிய பிரச்சனை காரணமாக நடைபெற்று வந்த ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி
புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சனின் பிளாக் பெடோரா(Black Fedora) ரக தொப்பி 77,640 யூரோவிற்கு ஏலம் போயுள்ளது.
பாலக்காடு தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி
இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
தொலைதூர குறுங்கோளான 'பென்னு'வில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கும் நாசா
வெற்றிகரமான ஏழு ஆண்டு திட்டத்திற்குப் பின்பு, பூமியிலிருந்து 8.23 கோடி கிமீ தொலைவில் இருக்ககூடிய, '101955 பென்னு' என்ற குறுங்கோளில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கிறது நாசாவின் OSIRIS-REx ஆய்வுக்கலம்.
பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை: இந்தியாவுக்கு எதிரான ஆதரங்களை சேகரிக்க கனடாவுக்கு உதவிய அமெரிக்கா
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான குற்றம்சாட்டை நிரூபிக்க கனடாவுக்கு அமெரிக்கா உதவியது என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 1.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பிற்கு ரூ.12.5 கோடி மதிப்புள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜப்பானிய நாட்டினை சேர்ந்த வெண்கல புத்தர் சிலை ஒன்று கலை பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அரங்கில் இருந்து கடந்த வாரம் திருடப்பட்டுள்ளது.
மின்சாதன இறக்குமதிக்கு இந்தியா தடை, ஆட்சேபனை தெரிவிக்கும் அமெரிக்கா
இந்தியாவில் கணினி (Compputer), மடிக்கணினி (Laptop) மற்றும் கைக்கணினி (Tablet) உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெற வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு.
இந்தியா-கனடா பிரச்சனையில் இருந்து ஓரங்கட்டுகிறதா அமெரிக்கா?
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நிலவும் பிரச்னையில் இருந்து அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் விலகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க கனடாவுக்கு 'ஐந்து கண்கள்' உளவுத்துறை ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
'கனடாவுக்கு அல்ல, இந்தியாவுக்கு தான் அமெரிக்கா ஆதரவு தரும்': அமெரிக்க அதிகாரி
ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கு "பெரிய ஆபத்தை" விளைவித்து தந்துள்ளதாக முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்
ஒரு காலத்தில் மிகவும் பெரிதாக இருந்த சாதனங்கள் அனைத்தும் இன்று நம்முடைய உள்ளங்கைக்குள் அடங்கி விட்டன. தற்போது இதற்கு அடுத்தபடியாக, உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கும் வந்து கொண்டிருக்கின்றன இந்த சாதனங்கள்.
துருக்கியில் சிகிச்சைப்பெறும் குழந்தை-சென்னைக்கு அழைத்துவர முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி
துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்று வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையை சென்னைக்கு அழைத்து வர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு
அமெரிக்காவின் ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 92 வயதான ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கான 3 மைதானங்களை உறுதிப்படுத்தியது ஐசிசி
இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த மாதம் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அடுத்த ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை இப்போதே தயாராகி வருகிறது.
அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர்
சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கின் கேங் அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்தது தெரிய வந்ததால் தான் பதவி நீக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
அவசரநிலையை அறிவித்த அமெரிக்க விமானம் மாயமானதால் பரபரப்பு
தெற்கு கரோலினாவில் அமெரிக்க மரைன் கார்ப்ஸ் போர் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை(செப் 17) காணாமல் போனது.
பயணிகளின் பைகளில் இருந்து பணத்தை திருடி கேமராவில் சிக்கிய விமான நிலைய அதிகாரிகள்
அமெரிக்கா: மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக(TSA) அதிகாரிகள் பயணிகளின் பைகளில் இருந்து பணம் மற்றும் பிற பொருட்களை திருடும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தங்கி படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி, ஜானவி கந்துலா.
இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்
இந்திய-அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துத்துறையாடியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப்
டென்னிஸ் விளையாட்டின் நான்கு கிராண்டுஸ்லாம் தொடர்களுள் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா?
உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறவிருக்கும் முதல் தேர்தலை இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் அடுத்த ஆண்டு சந்திக்கவிருக்கின்றன.
இரயில்வே மற்றும் துறைமுக கட்டுமான திட்டங்களில் கையெழுத்திடவிருக்கும் இந்தியா மற்றும் சவுதி அரேபியா?
இன்றும் நாளையும் (செப்டம்பர் 9 மற்றும் 10) இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கெடுக்க பல்வேறு நாட்டுப் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் இன்று இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார்கள்.
எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார்
G20 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கலந்து கொள்ளும் G20 மாநாடு இன்றும் நாளையும், இந்திய தலைநகரான புதுடெல்லியில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் இந்தியாவில் வருகை புரிந்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது?
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதிபர் ஜோ பைடன் G20 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று(செப் 8) புது டெல்லி வந்தடைந்தார்.
அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம்
கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியினை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டது.
யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி
அமெரிக்க இளம் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப், செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை தோற்கடித்து யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றார்.