NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர்
    அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர்
    உலகம்

    அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    September 19, 2023 | 05:33 pm 0 நிமிட வாசிப்பு
    அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர்
    முன்னாள் சீன அமைச்சர் கின் கேங்கை காணவில்லை என்று பல நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

    சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கின் கேங் அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்தது தெரிய வந்ததால் தான் பதவி நீக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. முன்னாள் சீன அமைச்சர் கின் கேங்கை காணவில்லை என்று பல நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கிடையில், சமீபத்தில், "காணாமல் போன" வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வாங் யீ என்பவர் சீனாவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், முன்னாள் அமைச்சர் கின் கேங்க்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தற்போது, கின் கேங் குறித்த சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் வெளிட்டுள்ளது.

    அமெரிக்காவால் சீனாவின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகுமா?

    கின் கேங் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியபோது, அங்கு ஒரு பெண்மணியுடன் அவர் கள்ள உறவு வைத்திருந்ததாகவும், அதனால் ஒரு குழந்தை பிறந்ததாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில் கூறியுள்ளது. இந்த விஷயம் விசாரணையில் நிரூபிக்கப்பட்டதனால் தான், சீன அரசாங்கம் கின் கேங்கை பதவி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. சீனாவும் அமெரிக்காவும் எதிரி நாடுகள் என்பதால், ஒரு வெளியுறவு அமைச்சரின் கள்ள உறவு நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்று சீனா அஞ்சுகிறது. எனவே, இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பை சமரசம் செய்ததா இல்லையா என்பதை சீனா தற்போது விசாரித்து வருகிறது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்றுவரை வெளியிடப்படவில்லை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    அமெரிக்கா
    வெளியுறவுத்துறை
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில்  நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டேவிஸ் கோப்பை
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி தோல்வி ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு அமெரிக்கா

    சீனா

    சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு டெல்லி
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி இத்தாலி
    'இந்தியாவுடனான உறவுகள் நிலையாக உள்ளது': சீனா  ஜி ஜின்பிங்
    ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபருக்கு பதிலாக கலந்து கொள்ள இருக்கும் லீ கியாங்: யார் இவர்? ஜி ஜின்பிங்

    அமெரிக்கா

    அவசரநிலையை அறிவித்த அமெரிக்க விமானம் மாயமானதால் பரபரப்பு  உலகம்
    பயணிகளின் பைகளில் இருந்து பணத்தை திருடி கேமராவில் சிக்கிய விமான நிலைய அதிகாரிகள் உலகம்
    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா  வைரல் செய்தி
    இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்  இந்தியா

    வெளியுறவுத்துறை

    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  இந்தியா
    இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய வலைதளம் அறிமுகம்  மத்திய அரசு
    'மணிப்பூர் பெண்களின் வீடியோவை பார்த்து அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது' மணிப்பூர்

    உலகம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமாகி இருக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா  கனடா
    பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் காசி ஃபேஸ் ஈஷா  பாகிஸ்தான்
    இரண்டாவது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் கூகுள் துணை நிறுவனர் செர்கே பிரின் கூகுள்

    உலக செய்திகள்

    பிரேசிலின் அமேசான் பகுதியில் விமான விபத்து: 14 பேர் பலி  பிரேசில்
    இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை  இந்தியா
    உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம் இன்ஃபோசிஸ்
    உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் 700 மில்லியன் மக்கள் உலகம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023