முடிவுக்கு வந்தது ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம்
கடந்த 148 நாட்களாக ஊதிய பிரச்சனை காரணமாக நடைபெற்று வந்த ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ரைடர்ஸ் கோல்ட் ஆப் அமெரிக்காவின் (Writers Guild of America அல்லது WGA) நிர்வாகிகள், ஹாலிவுட் ஸ்டுடியோகள், ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டது. ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் மற்றும் டபிள்யுஜிஏ இடையே தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் எழுத்தாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பலாம் என டபிள்யுஜிஏ அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு கோரி கடந்த மே 2 ஆம் தேதி டபிள்யுஜிஏ போராட்டத்தை அறிவித்தது. இதை அடுத்து ஹாலிவுட்டில் அனைத்து பணிகளும் முடங்கின. எழுத்தாளர்களுக்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகர்களும் போராட்டத்தை அறிவித்த நிலையில் அவர்களது போராட்டம் இன்னும் தொடர்கிறது.