ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தங்கி படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி, ஜானவி கந்துலா.
இவர் கடந்த ஜனவரி மாதம், சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது போலீசாரின் ரோந்து வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், நேற்று ஒரு வீடியோ வெளியானது.
சம்பவ இடத்தில் விசாரணையின்போது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோ, காவல்துறை அதிகாரிகளின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த பாடிகேம்-இல் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதில், விபத்து தொடர்பாக போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மேலதிகாரி ஒருவர், அந்த பெண் தான் இறந்துவிட்டாளே என்று சிரித்தபடி பேசுவது போல சத்தம் கேட்கிறது.
card 2
விசாரணை கோரும் இந்திய தூதரகம்
அந்த வீடியோவில் மேலும் இறந்த பெண்ணைப் பற்றி கேலியாக சிரித்துக்கொண்டே "ஒரு செக் எழுதுங்கள், 11 ஆயிரம் டாலர்கள்.. அந்த பெண்ணுக்கு எப்படியும் 26 வயது தான். அவளுக்கு குறைந்த அளவு மதிப்பே இருக்கும்" என அந்த அதிகாரி பேசுவது கேட்கிறது.
காவல் அதிகாரியின் இந்த விமர்சனம், பலத்த கண்டனங்களை ஈர்த்துவருகிறது.
"இது கண்டனத்துக்குரியது" என கூறும் அமெரிக்காவின் இந்திய தூதரகம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேசி வருவதாக கூறியுள்ளது.
விபத்தில் பலியான ஜானவி கந்துலா, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த்ஈஸ்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
விசாரணை கோரும் இந்தியா
.. for a thorough investigation & action against those involved in this tragic case.
— India in SF (@CGISFO) September 13, 2023
The Consulate & Embassy will continue to closely follow up on this matter with all concerned authorities.@IndianEmbassyUS @MEAIndia