
கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
இறுதி நேரத்தில் கையெழுத்தான குறுகிய கால நிதி மசோதாவால் அமெரிக்க அரசு முடங்குவது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையில் குறுகிய கால நிதி மசோதா கையெழுத்தானது.
இந்த மசோதா அமெரிக்க அரசிற்கு நவம்பர் 17 வரை நிதியளிக்க வழிவகை செய்யும். மேலும் இந்த மசோதாவில் உக்கிரேனுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து எதுவும் இடம்பெறவில்லை.
இந்த மசோதா மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்க ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்படுவதும், அமெரிக்க அரசுப்பணிகள் முடங்குவதும் தடுக்கப்பட்டுள்ளது.
2nd card
அமெரிக்க அரசு ஏன் முடங்குகிறது?
அமெரிக்க அரசின் பெரும்பான்மையான துறைகள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதியுதவி பெற்று இயங்குகின்றன.
ஒவ்வொரு வருடமும் இந்த துறைகள் தாக்கல் செய்யும் நிதி கோரிக்கைகளை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின், அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படும்.
இவ்வாறான நிதி கோரிக்கைகள் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கும் நிதி ஆண்டுக்கு முன் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படாத பொழுது அமெரிக்க அரசு முடங்கும்.
அத்தியாவசியமில்லாத துறைகள் அனைத்தும் செயல்படாது. ராணுவம் முதலிய துறைகள் கூட பாதிக்கப்படும்.
3rd card
நிதி மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஏன் இவ்வளவு சிக்கல்கள்?
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தாக்கல் செய்யப்படும் செலவினங்களில் தோராயமாக 30% கூட ஏற்றுக்கொள்ளப்படாத போது அமெரிக்க அரசு முடங்குகிறது.
அமெரிக்கா நாடாளுமன்றம் செனட், பிரதிநிதிகள் சபை என இரு சபைகளால் ஆனது
எதிர்க்கட்சியான குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையுடன் உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி செனட் சபையில் குடியரசு கட்சியை விட ஒரு உறுப்பினரை அதிகம் பெற்றுள்ளது.
இதனால் நிதி மசோதாவை நிறைவேற்ற ஆளும் ஜனநாயக கட்சிக்கு குடியரசு கட்சியின் ஆதரவும் தேவைப்படுகிறது.
குடியரசு கட்சியினர் உக்கிரேனுக்கு உதவிகள் அளிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததால் மசோதா நிறைவேறுவது தாமதமானது.
இந்நிலையில் அமெரிக்க அரசு முடங்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் நாடாளுமன்றம் தற்காலிக நிதி மசோதாவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.